சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி ஊராட்சி பகுதியை சேர்ந்த மூதாட்டி ராமாயி(78) இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன் இயற்கை எய்திவிட்டார். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்ற நிலையில், மூத்த மகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். மற்ற இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் ராமாயி தன்னுடைய சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. ஆகவே கடந்த 21 ஆம் தேதி அந்த பகுதியில் தெருக்கூத்து நடைபெற்றுள்ளது. அதை பார்த்துவிட்டு ராமாயி தனியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பூசாரிமூப்பன் வளவு பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது, அவரை வழிமறித்த ஒரு வாலிபர் மூதாட்டியின் வாயை பொத்தி வலுக்கட்டாயமாக கட்டாயமாக புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். போதையில் மூதாட்டியை அவர் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி மயக்கம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து, அவரை மீட்டு எடப்பாடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர் யார் என்று காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்