fbpx

200 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் சாம்சங்.. பீதியில் ஊழியர்கள்..!!

இந்தியாவில் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் துறை எதிர்கொள்ளும் சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு நடவடிக்கையாக , சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் அதன் இந்திய செயல்பாடுகள் முழுவதும் 200 நிர்வாகிகளை பணிநீக்கம் செய்ய உள்ளது.

இந்தியச் சந்தையில் சாம்சங் நிறுவனத்தின் வர்த்தகத்தில் மந்தநிலை உருவாகியுள்ளது. மக்கள் மத்தியில் சாம்சங் தயாரிப்புகளுக்கு போதுமான டிமாண்ட் இல்லாத காரணத்தால் இதன் விற்பனை அதிகம் பாதிக்கப்பட்டு சந்தை பங்கீட்டை இழந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சாம்சங் நிறுவனத்திற்கு அதிகப்படியான லாபத்தைத் தரும் ஸ்மார்ட்போன் சந்தையில் வர்த்தகத்தை இழந்து வருவது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்ற முடிவில் சாம்சங் தனது இந்திய வர்த்தகத்தில் பணியாற்றும் 200 நிர்வாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைத்து லாபத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த பணிநீக்கத்தில் அதிகம் பாதிக்கப்படப் போவது ஸ்மார்ட்போன், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ், ஹோம் அப்ளையன்சஸ், சப்போர்ட் பிரிவில் இருக்கும் ஊழியர்கள் தான். சாம்சங் இந்திய நிர்வாகத்தில் சுமார் 2000 பேர் பணியாற்றி வரும் வேளையில் இந்த பணிநீக்கம் மூலம் 9 – 10 சதவீதம் பேர் பாதிக்கப்பட உள்ளனர்.

Read more ; காசாவில் உள்ள பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் பலி..!!

English Summary

Samsung India Braces for Major Layoffs Amid Slowdown, Chennai Strike Adds Pressure

Next Post

ரீடிங் கண்ணாடிக்கு பதிலாக சந்தைக்கு வரும் கண் சொட்டு மருந்து..!! - தற்காலிக தடை விதித்த நிபுணர் குழு

Thu Sep 12 , 2024
Drug regulator suspends Entod Pharmaceuticals' eye drops over unauthorised claims

You May Like