fbpx

Sania Mirza | காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் சானியா மிர்சா..? எந்த தொகுதியில் தெரியுமா..?

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் சானியா மிர்சாவை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால், அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பிஆர்எஸ் 9 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஏஐஎம்ஐஎம் ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தெலங்கானாவில் கடந்தாண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ் தனது பலத்தை தக்க வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிஆர்எஸ் மற்றும் பாஜக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை மட்டுமே அறிவித்துள்ளது.

ஹைதராபாத், கம்மம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை அறிவிக்கவில்லை. இந்நிலையில், பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை களமிறக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. தெலங்கானா காங்கிரஸ் தலைவர்கள் அகில இந்திய கமிட்டியிடமும் சானியா மிர்சாவை வேட்பாளராக நிறுத்த ஒப்புதல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Read More : ’சீமான் அண்ணன் தான் என்னுடைய ஸ்லீப்பர் செல்’..!! பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை..!!

Chella

Next Post

இஷா அம்பானியின் வீட்டை விலைக்கு வாங்கிய பிரபல நடிகர், நடிகை..!! விலை எவ்வளவு தெரியுமா..? அப்படி என்ன ஸ்பெஷல்..!!

Tue Apr 2 , 2024
அம்பானி குடும்பத்தில் எந்த சம்பவம் நடந்தாலும், அது உலக ஃபேமஸ் ஆகிவிடுகிறது. அப்படித்தான் இப்போதும் ஒரு சமாச்சாரம் நடந்து, பலரது வாயை பிளக்க வைத்து வருகிறது. முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி. இவர் ரிலையின்ஸின் சில்லறை விற்பனை வணிகத்தை நிர்வகித்து வருகிறார். இப்போது இஷாவுக்கு 32 வயதாகிறது.. கடந்த 2018ஆல் இவருக்கு திருமணம் நடந்து தற்போது, கிருஷ்ணா, ஆதியா என்ற இரட்டைக் குழந்தைகளும் உள்ளனர். இஷா அம்பானி கடந்த […]

You May Like