உத்தரபிரதேச மாநிலம் லக்னோ சிவில் நீதிமன்ற வளாகத்தில் ஜீவா என்ற கேங்க்ஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ சிவில் நீதிமன்ற வளாகத்தில் ஜீவா என்ற கேங்க்ஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். லக்னோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜீவா, சுட்டுக் கொல்லப்பட்டபோது, விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார். தாக்குதல் நடத்திய நபர் வக்கீலாக மாறுவேடமிட்டு வந்துள்ளார். இந்த தாக்குதலில் மைனர் பெண் உட்பட மேலும் இருவர் காயமடைந்தனர்.
பாஜக தலைவர் பிரம்மதத் திவேதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சீவ் ஜீவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், காயம் அடைந்த சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் லக்னோ காவல்துறை துணை ஆணையர் ராகுல் ராஜ் தெரிவித்துள்ளார்.