fbpx

“ சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான, பழமைவாய்ந்த மொழி..” ஆளுநர் ரவி பேச்சு..

சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான, பழமைவாய்ந்த மொழி என்று தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்..

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘ தமிழ்நாடு தரிசனம்’ என்ற தலைப்பில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி “ தமிழ் மீது ஒருபோதும் இந்தியை திணிக்க முடியாது.. இந்தியாவில் ஆன்மீக மற்றும் கலாச்சாரத்தின் தலைநகராக தமிழ்நாடு தொடர்ச்சியாக விளங்குகிறது.. இந்தியை விட தமிழ் மொழி மிகவும் பழமைவாய்ந்தது.. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான, பழமைவாய்ந்த மொழி.. பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தை கற்றுக்கொள்ள நினைப்பத் மகிழ்ச்சி அளிக்கிறது..” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு, தமிழ் மொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் ஆளுநர், தற்போது சமஸ்கிருதம் தமிழ் மொழிக்கு நிகரான மொழி என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..

Maha

Next Post

உத்தரவு போட்ட சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியில் இறங்கிய காவல்துறை…..! தமிழ்நாடு முழுவதும் 72 போலி மருத்துவர்கள் கைது…..!

Thu Apr 13 , 2023
தமிழ்நாடு முழுவதும் மெடிக்கல் போன்ற இடங்களில் அரசு அனுமதி பெறாத மற்றும் மருத்துவ படிப்பு தகுதி இல்லாத சிலர் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்ப்பது, ஊசி போடுவது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய நிலையில் தான் தமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ஆகவே போலி மருத்துவர்கள் தேடும் பணியில் காவல்துறையினர் முடிக்கி விடப்பட்டுள்ளனர். அந்த விதத்தில் தமிழ்நாடு முழுவதிலும் போலி மருத்துவர்கள் கண்டுபிடித்து […]

You May Like