fbpx

அதிர்ச்சியில் சசிகலா..!! அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லும்..!! சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!!

அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. பின்னர், ஒற்றை தலைமை விவகாரம் பூகம்பமாக வெடித்த நிலையில், ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்டது.

இதையடுத்து, கடந்தாண்டு ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனால், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதனை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து விகே சசிகலாவை நீக்கியது செல்லும் என மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் சுப்பிரமணியன், செந்தில் குமார் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Chella

Next Post

EMI செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா?… கவலை வேண்டாம்!… ஈஸியா சமாளிக்க டிப்ஸ்!

Tue Dec 5 , 2023
இந்தியாவில் இப்போது கடன் வாங்குவது என்பது மிகவும் எளிதாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் எளிதில் கடன் வாங்கிவிட முடியும். நொடிப் பொழுதில் கடன் வழங்கும் நிறைய மொபைல் ஆப்களும் வந்துவிட்டன. இந்த விஷயத்தில் நிறைய மோசடிகளும் நடக்கின்றன. அதைத் தடுக்கவும், அதிக கடன் வழங்குவதைக் கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி சமீபத்தில் விதிமுறைகளை மாற்றியது. உங்களிடம் நல்ல கிரெடிட் ஸ்கோர் வங்கிகள் உங்களுக்கு எளிதாக தனிநபர் கடனை வழங்கும். வருமானத்தின் பெரும்பகுதி கடனைத் […]

You May Like