fbpx

4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் சத்யராஜின் மனைவி; தனது அப்பாவை குறித்து மகள் போட்ட பதிவு..

கோவை மாவட்டத்தில் பிறந்து, வில்லனாக அறிமுகமாகி, பின்னர் சினிமாவின் புகழ் பெற்ற முக்கிய கதாநாயகனாக மாறியவர் தான் சத்யராஜ். சத்யராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காக பெரும் மதிப்பு அவருக்கு கிடைத்தது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்யராஜிற்கு கொடுத்தார். இப்படத்தில் நடிகை குஷ்பு சத்யராஜிற்கு ஜோடியாக நடித்துள்ளார். சினிமா மட்டும் இல்லாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காகவும் பல இடங்களில் குரல் கொடுப்பவர் தான் சத்யராஜ்.

இத்தனை புகழ் பெற்ற சத்யராராஜிற்க்கு தற்போது பட வாய்புகள் அதிகம் வரவில்லை. இதனை புரிந்து கொண்ட சத்யராஜ், தனது கதை தேர்வை மாற்றிக் கொண்டு, ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டு, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.. 1987 இல் சத்யராஜூம், அவருடைய மனைவியும் சத்யராஜின் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரை பத்திரிக்கை வைத்து அழைத்தனர். அதன்படி எம்.ஜி.ஆரும் தன் துணைவியாருடனும் அமைச்சர் முத்துசாமியுடனும் சென்றார். அப்போது எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் என்பதால் திரை உலகத்தினரும் மகிழ்ந்தார்கள்.

அதன்பின் திருமணத்திற்கு வந்தமைக்கு எம்.ஜி.ஆருக்கு நன்றி சொல்ல சென்ற போது எம்.ஜி.ஆர் உடற்பயிற்சி செய்யும் கர்லாக்கட்டையை பரிசாக கேட்டு வாங்கிக் கொண்டார் சத்யராஜ். இந்நிலையில், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் சினிமா உலகிலும் புகழ்பெற்ற சத்யராஜின் மகன் சிபிராஜ், தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். இவர் சமீபத்தில் தனது தாயை பற்றி பகிர்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆம், நடிகர் சத்யராஜின் மனைவி மகேஸ்வரி நான்கு ஆண்டுகளாக கோமாவில் இருப்பதாகவும், அவருக்கு பிஜி குழாய் மூலமாக தான் உணவு செலுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நான்கு வருடங்களாக சத்தியராஜ் சிங்கிள் பேரண்டாக இருக்கிறார், அவருக்கு நான் நல்ல அம்மாவாக இருந்து வருகிறேன் என திவ்யா சத்யராஜ் பகிர்ந்திருக்கிறார்.

Read more: “எனக்கு வெட்கமே கிடையாதுங்க; மார்பகம் தெரியும் படி தான் கோவில் சிலையில் இருக்கும்..” நெட்டிசனுக்கு vj பார்வதி கொடுத்த பதிலடி…

English Summary

sathyarajs-wife-was-in-coma-for-the-past-4-years

Next Post

இணையத்தில் வைரலான உல்லாச வீடியோ; கணவனை ஏமாற்றிய பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி..

Mon Nov 11 , 2024
man-released-intimate-video-of-his-married-lover

You May Like