டெல்லி திகார் ஜெயிலில் உள்ள சத்யேந்தர் ஜெயினுக்கு மாசாஜ் செய்ய்பட்ட காட்சிகள் வெளியான நிலையில் இன்று அவர் ருசிகரமான உணவுகளை சாப்பிடும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து பண மோசடி வழக்கில் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின், வைபவ் ஜெயின் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சத்யேந்தர் முன்ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு சத்யேந்தர் ஜெயின் சிறையில் அடைக்கப்பட்டார் . சிறையில் சுகபோக வாழ்க்கை வாழ்வதாக வீடியோக்கள் வந்த வண்ணம் உள்ளது.
நேற்று வெளியான வீடியோவில் சிறையில் உள்ள மற்றொரு குற்றவாளி ’மசாஜ்’ செய்வது போன்ற வீடியோ வெளியாகியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முதுகு, கால்களை மசாஜ் செய்யும் காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. மசாஜ் செய்துவிட்டவர ஒரு கற்பழிப்பு குற்றவாளி என கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியினர் அவருக்கு முதுகு தண்டுவடத்தில் பிரச்சனை உள்ளது. இதனால் பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று வெளியான வீடியோவில் ருசியான உயர்தர சாப்பாடு வாங்கி சாப்பிடும் வீடியோ சிக்கி உள்ளது. ஏற்கனவே சத்யேந்தர் ஜெயினை பதவி நீக்க வேண்டும் என்று எதிர்கட்சியான பா.ஜ.க. கோரிக்கை வைத்து வருகின்றது. இந்நிலையில் கால் மேல் கால் போட்டு சுகபோக வாழ்க்கை வாழ்வது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அனைவருக்கும் குடிக்க பொதுவான நீர் வழங்கப்படும் நிலையில் இவருக்கு மட்டும் எவ்வாறு பிசிலரி தண்ணீர் கிடைக்கின்றது எனவும் வெளியில் இருந்து வரும் நபர் இவருக்கு உணவு கொடுக்கும் காட்சிகளும் இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.