fbpx

அர்ஜென்டினாவை அலறவிட்ட சவுதி..!! வெற்றியை கொண்டாட இன்று பொதுவிடுமுறை அறிவித்தார் மன்னர்..!!

அர்ஜென்டினா அணிக்கு எதிராக சவுதி அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், இன்று பொதுவிடுமுறை அறிவித்துள்ளார் சவுதி மன்னர் சல்மான்.

கத்தாரில் நடைபெற்று வரும் 2022ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணி, சவுதி அரேபிய அணியை திணறடித்து, கோல் அடிப்பதற்கான சிறப்பான வாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கினர். ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த பெனால்டி-யை பயன்படுத்தி அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி அசத்தலான கோல் அடித்தார். கோல் விகிதத்தை சமன் செய்து, பதிலடி கொடுக்கும் முனைப்பில் சவுதி வீரர்கள் போராடியும் முதல் பாதியின் இறுதி வரை சவுதி அரேபியா அணியால் கோல் எதுவும் அடிக்க முடியாமல் போனது. இதனால் முதல் பாதியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.

அர்ஜென்டினாவை அலறவிட்ட சவுதி..!! வெற்றியை கொண்டாட இன்று பொதுவிடுமுறை அறிவித்தார் மன்னர்..!!

இரண்டாம் பாதியில் மிரட்டிய சவுதி

முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் 2ஆம் பாதி முழுவதும் சவுதி அரேபியா ஆதிக்கம் செலுத்தினர். ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் சவுதி அரேபியாவின் சலே அல்ஷெரி கோல் அடித்து அசத்த, ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் சலேம் அல்தாவசாரி கோல் அடித்து மிரட்டினார். இதனால் சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றதுடன், போட்டியில் விறுவிறுப்பு சென்றது. அர்ஜென்டினா அணியால் ஆட்டத்தின் இறுதி வரை சவுதி அரேபியாவின் கோல் கணக்குகளை முறியடிக்க முடியாததால் சவுதி அரேபியா அணி 1 கோல் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

அர்ஜென்டினாவை அலறவிட்ட சவுதி..!! வெற்றியை கொண்டாட இன்று பொதுவிடுமுறை அறிவித்தார் மன்னர்..!!

கால்பந்து அணியில் சிறந்த அணியாக கருத்தப்படும் அர்ஜென்டினா அணியை சவுதி அரேபியா அணி தோற்கடித்ததால் அந்த நாட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் குதித்து வருகின்றனர். இதற்கிடையே, அர்ஜென்டினா அணிக்கு எதிராக சவுதி அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், இன்று பொதுவிடுமுறை அறிவித்துள்ளார் சவுதி மன்னர் சல்மான்.

Chella

Next Post

மொத்தம் 8 கோணிப்பையில் ரூ.1.3 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்...!

Wed Nov 23 , 2022
போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவுடன் இணைந்து மண்டபம் பகுதியைச் சேர்ந்த இந்திய கடலோர காவல்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ராமேஸ்வரம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நான்கு பேருடன் சென்ற படகினை தடுத்து நிறுத்தினர். இந்த படகு அதிவேகமாக சென்று தப்பிக்க முயற்சி செய்த போது கடலோர காவல்படையினர் அதனை துரத்திச்சென்று பிடித்தனர். இந்த படகில் மேற்கொண்ட சோதனையின் போது 8 கோணிப்பைகளில் 300 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா, 500 […]

You May Like