fbpx

இன்று காலை 10:30-க்கு சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவு விழா…! பிரதமர் மோடி பங்கேற்பு…!

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவுநாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிறைவுநாள் நிகழ்ச்சியில் இன்று காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி முறையில் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற முன் முயற்சியின் அடிப்படையில் நாட்டின் இரு வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களிடையேயான நீண்ட நெடிய தொடர்புகளை புதுப்பிக்கும் வகையில் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் காரணமாக இந்த சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதே கண்ணோட்டத்தில் முன்னதாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

குஜராத்திற்கும், தமிழகத்திற்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்படும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய தொடர்புகளை முன்னெடுத்துச்செல்லும் வகையில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நூற்றாண்டுகள் முன்னதாக ஏராளமான மக்கள் சௌராஷ்ரா பிராந்தியத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு புலம்பெயர்ந்தனர்.

இந்த சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தமிழகத்தில் வாழும் சௌராஷ்டிரா மக்களுக்கு தங்களது வேர்களான குஜராத் பகுதிகளுடன் மற்றும் அப்பிராந்திய மக்களுடன் தொடர்பை புதுப்பித்துக்கொள்ள வழிவகுத்தது. இந்த 10 நாள் நிகழ்வில் 3000 மேற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த சௌராஷ்டிரா மக்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சோம்நாத்துக்கு வந்து சென்றனர். இம்மாதம் 17-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி இன்று சோம்நாத்தில் நிறைவடைகிறது.

Vignesh

Next Post

கடல் பகுதிகளில் 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று...! மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம் என எச்சரிக்கை...!

Wed Apr 26 , 2023
இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சிலஇடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதேபோல வரும்‌ 28, 29 ஆகிய தேதிகளில்‌ தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக […]
மிரட்டும் ’மாண்டஸ்’ புயல்..!! மிரண்டுபோன வானிலை மையம்..!! BIG WARNING..!!

You May Like