2024 மக்களவை தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா, இல்லையா என்று உலக புகழ்பெற்ற ஜோதிடர் ருத்ர கரண் பிரதாப் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், தமிழ்நாட்டிற்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அடுத்த பிரதமர் யார் என்பது தான் அனைவரது கேள்வியாகவும் உள்ளது. நரேந்திர மோடி மீண்டும் 3-வது முறை பிரதமரானால் ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்து விடுவார்.
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஜோதிடரான ருத்ர கரண் பிரதாப் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற ஜோதிடரான ருத்ர கரண் பிரதாப் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “வரும் மக்களவை தேர்தலில் பெரும்பான்மையான பலத்துடன் பாஜக ஆட்சியமைக்கும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார்.
ஜோதிட ரீதியாக அவர் தற்போது செவ்வாய் மஹாதசையை கடந்து வருவதால், நிலம் தொடர்பான விஷயங்களில் சில நடவடிக்கைகளை எடுப்பார். இதன், முதற்கட்டமாக ஏப்ரல் 2025 முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும்” என்றார். இவர் கூறிய கருத்து கணிப்புகள் அப்படியே நடந்ததாகவும் கூறப்படுகிறது.
Read More : ’சொந்த மகளா இருந்தாலும் பிரச்சாரம் செய்ய முடியாது’..!! வீரப்பன் மனைவி சொன்ன பதில்..!!