fbpx

உங்கள் கணக்குகளை உடனே இன்றே காப்பாற்றிக் கொள்ளுங்கள்..!! நாளையே கடைசி..!!

டிசம்பர் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டில் இல்லாத ஜிமெயில் கணக்குகளை முடக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. நாளை கடைசி தினம் என்பதால் ஜி-மெயில் வைத்திருப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் கூகுள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பயன்படுத்தப்படாத கணக்குகள் அதாவது இரண்டு வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, பயன்பாட்டில் இல்லாத கூகுள் கணக்குகள், ஜிமெயில்கள், யூடியூப் சேனல்கள் அனைத்தும் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த கணக்குகளை நிரந்தரமாக நீக்கவுள்ளதாக கூகுள் அறிவித்துள்ள நிலையில், இந்த பணி டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. எனவே, கூகுள் பயனர்கள் இன்றைக்குள் தங்கள் கணக்குகளில் உள்ள கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து ஒரு முறையாவது உள்ளீடு செய்து தங்கள் கணக்குகளை காப்பாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இது தொடர்பாக கூகுள் அனைத்து ஜி-மெயில் கணக்குகளுக்கும் எச்சரிக்கை செய்தியையும் அனுப்பி வருகிறது.

Chella

Next Post

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் பிளஸ் 2 படிக்கலாமா..? சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Thu Nov 30 , 2023
சிவகங்கை மாவட்டம் வி.மலம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மாணவர் ஒருவர் கடந்த 2022ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளார். அதில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் தோச்சி பெறவில்லை. இதனால், ஆகஸ்ட் மாதம் மறுதேர்வு எழுதினார். இதில் கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளார். அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வில் 25 மதிப்பெண்ணும், எழுத்து தேர்வில் 15 மதிப்பெண் […]

You May Like