fbpx

ரேஷன் கடைகளில் சேமிப்பு கணக்கு..!! குடும்ப அட்டைதாரர்கள் குஷி..!! கூட்டுறவுத்துறையின் மாஸ் திட்டம்..!!

ரேஷன் கடைகளில் சேமிப்பு கணக்கு துவங்குவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் செயல்பட்டு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவக்கி வங்கி சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் விவசாய உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன், உரக்கடன், கால்நடை வளர்ப்பு கடன் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

கடந்த 2023ஆம் ஆண்டில் 18.36 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.15,500 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, சங்கங்களில் விவசாய உறுப்பினராக உள்ள நபர்களின் சராசரி வயது 50 ஆகும். எனவே, அதிக இளைஞர்களை ஈர்க்கும் வகையில், புதிய வங்கியியல் திட்டங்களை வகுத்து, கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினராக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி, வங்கியால் வழங்கப்படும் சேவைகள், அரசு திட்டங்கள் மக்களை சென்றடையும் வகையில் இருக்க வேண்டும்.

ரேஷன் கடைகள் வாயிலாக, கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு மற்றும் கடன் சேவை மக்களை சென்றடையும் வகையில், அப்பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில், சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும், மத்திய கூட்டுறவு வங்கிகளின் சேமிப்பு திட்டங்கள், நிரந்தர வைப்பு திட்டங்கள், கடன் திட்டங்கள் குறித்த கையேடு விநியோகிக்கவும், ரேஷன் கடை ஊழியர்களை கொண்டு, சேமிப்பு கணக்கு விண்ணப்பத்தை மக்களுக்கு வழங்க வேண்டும்.

ரேஷன் ஊழியர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறவும், பெறப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் துவக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு, கடை ஊழியர்களுக்கு தலா ஒரு கணக்குக்கு, ரூ.5 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். சேமிப்பு கணக்குதாரர்களுக்கு, கூட்டுறவு வங்கி கடன் திட்டங்கள், அரசின் கடன் திட்டங்கள், நிரந்தர வைப்பு திட்டங்கள் குறித்த கையேடுகள், வங்கியின் மின்னணு பரிவர்த்தனை வசதி, ஏடிஎம் கார்டு வசதிகளை வழங்க வேண்டும். இதுகுறித்து, ரேஷன் கடை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள், பண்டகசாலை துணை பதிவாளர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி, மத்திய கூட்டுறவு வங்கிகளில் மக்கள் சேமிப்பு கணக்கு துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : 2026இல் நம்ம தான்..!! பூவை தேடி தேனீக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணி கட்சிகள் வரும்..!! எடப்பாடி பழனிசாமி பேச்சு..!!

English Summary

An important announcement has been made regarding the opening of savings accounts in ration shops.

Chella

Next Post

தமிழக மருத்துவத் துறையில் பிசியோதெரபிஸ்ட் காலிப்பணியிடங்கள்..!! மாத சம்பளம் ரூ.1,14,800..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Thu Oct 24 , 2024
Physiotherapist Grade - II (Physiotherapist Grade - II) Posts to be filled. A total of 47 people are to be inducted.

You May Like