fbpx

மாதந்தோறும் வருமானம்..!! வட்டி எவ்வளவு கிடைக்கும் தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய தபால் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் மாதம் தோறும் வருமானத்தை பெற விரும்பும் நபர்கள் மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் ஒரு முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் பணத்தை செலுத்தலாம். அதேபோல ஒவ்வொரு மாதமும் வட்டியானது உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும். இதில் உங்களுக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி பிடித்தம் செய்யப்படாது.

ஒரு தனிநபர் கணக்கில் ரூபாய் 9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூபாய் 15 லட்சம் வரையிலும் முதலீடு செய்ய முடியும். இதற்கு ஆண்டு வட்டி விகிதம் 7.4% வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கணக்கினை தொடங்குவதற்கு அடையாளச் சான்று மற்றும் முகவரி சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். வீட்டின் அருகே உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று ஒரு சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும்.

உங்களது பெயர் பிறந்த தேதி மொபைல் எண் மற்றும் நாமினி ஆகிய விவரங்கள் சரிபார்க்கப்படும் முதன்முறையாக குறைந்தபட்சம் ரூ.1,000 பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதனை ரொக்கமாகவோ அல்லது காசோலையாகவோ வழங்கலாம். உங்களுக்கான வட்டி மாதாந்திர அடிப்படையில் உங்களது கணக்கிலேயே வரவு வைக்கப்படும். இத்திட்டத்தின் விதிகளின்படி, கணக்கு தொடங்கி ஓராண்டு முடியும் வரை பணத்தை திரும்ப பெற முடியாது.

ஒருவேளை லாக்கின் காலத்திற்கு முன்பு பணத்தை திரும்ப பெற விரும்பினால் குறிப்பிட்ட தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். கணக்கு தொடங்கிய 3 ஆண்டுகளில் பணத்தை எடுக்க விரும்பினால், பிரின்சிபல் தொகையில் இருந்து 2% கழிக்கப்படும். 5 ஆண்டுகளுக்குள் பணத்தை திரும்ப பெற்றால் பிரின்சிபில் தொகையில் இருந்து 1% திரும்ப பெற்றுக் கொள்ளப்படும்.

Read More : குலதெய்வ கோயிலுக்கு சென்றால் இதை மறக்காம பண்ணுங்க..!! எவ்வளவு நன்மைகள் தெரியுமா..?

English Summary

Your investment earns 7.4% interest per annum.

Chella

Next Post

ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. CBI விசாரணை கோரி போராடியவர்கள் மீது வழக்கு...! அன்புமணி ராமதாஸ் கண்டனம்..‌!

Sun Aug 11 , 2024
Armstrong murder.. Case against those who fought for CBI probe

You May Like