பொதுமக்களுக்கு லாபம் அளிக்கும் வகையில், பல சிறு சேமிப்பு திட்டங்கள் அஞ்சல் அலுவலகங்களில் உள்ளன. இந்த திட்டங்களின் வட்டி விகிதங்கள் வங்கிகளை விட அதிகமாக இருப்பதால், மக்கள் அதிகளவில் அஞ்சலகங்களில் பணத்தை சேமிக்க தொடங்கியுள்ளனர். இவ்வாறு தனிநபர்களுக்கு பயன்படக்கூடிய சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டம். இந்த டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 செலுத்தி, நீங்கள் கணக்கை தொடங்கலாம். பிறகு நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. 5 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
வட்டி எவ்வளவு? : நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு 6.9% முதல் 7.5% வரை வட்டி வழங்கப்படுகிறது. அதாவது 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் என்ற முறையில் முதலீடு செய்யலாம். இதற்கு 6.9%, 7.0 %, 7.1 %, 7.5% என்ற முறையில் வட்டி கிடைக்கிறது. முதிர்வு காலத்தை எட்டியதும், மீண்டும் இதை புதுப்பித்துக் கொள்ளலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகையின் வட்டி காலாண்டிற்கு ஒருமுறை கணக்கிடப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்த தொகையின் மீது அவசரத் தேவைகளுக்கு கடனும் பெறலாம்.
கணக்கு தொடங்கி 6 மாதத்திற்கு பிறகு, முதிர்வு காலம் அடைவதற்கு முன்பே கூட திட்டத்தில் இருந்து வெளியேறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 5 ஆண்டுகள் கால திட்டத்தை தேர்வு செய்வோருக்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சியின் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். ஓராண்டு காலத்திற்கு 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 6.9 % வட்டியில் உங்களுக்கு வட்டியாக மட்டும் 70,806 ரூபாய் கிடைக்கும்.
அதாவது ஓராண்டின் முடிவில் உங்களிடம் 10,70,806 ரூபாய் இருக்கும். இதுவே இரண்டு ஆண்டுகளுக்கு என முதலீடு செய்தால் 7% வட்டி கிடைக்கும். எனவே, உங்களின் 10 லட்சம் ரூபாய் முதலீடுக்கு 1,48,882 ரூபாய் வட்டி கிடைக்கும். அதுவே மூன்று ஆண்டுகளுக்கு 7.1 % வட்டி கிடைக்கும். அப்படியெனில் 10 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு வட்டி மட்டுமே 2,35,075 ரூபாய் கிடைக்கும். அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களின் 10 லட்சம் ரூபாய் முதலீடு 4,49,948 ரூபாய் வட்டியுடன் 14,29,948 ரூபாய் என வளர்ந்திருக்கும். கிடைக்கும் வட்டித்தொகைக்கு வரி விலக்கு பெற முடியும்.
Read More : ’இது மட்டும் நடந்தால் CAA சட்டம் வாபஸ்’..!! காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் அதிரடி அறிவிப்பு..!!