fbpx

முகம் பொலிவாக, உடலில் நச்சுதன்மை நீங்க, இந்த ஒரு டீடாக்ஸ் ட்ரிங்க் போதும்.! அளப்பரியா நன்மைகள்.!

முகம் பொலிவு பெறுவதற்கும் உடலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மை நீங்குவதற்கும் கண்பார்வை மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய அற்புதமான ஒரு பானம் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

இதற்கு முதலில் 1 கேரட், 2 நெல்லிக்காய், சிறிதளவு பசுமஞ்சள், 1 டீஸ்பூன் அரைத்த மிளகு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கேரட்டை நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதன் பிறகு நெல்லிக்காயையும் சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

ஒரு பிளண்டரில் அதில் நறுக்கிய கேரட் மற்றும் நெல்லிக்காய் துண்டுகளை போட்டு அவற்றுடன் மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு அனைத்து பொருட்களையும் நன்றாக பிளண்ட் செய்து எடுக்கவும். இப்போது நமது ஹெல்த் ட்ரிங்க் தயாராகிவிட்டது.

இந்த பானத்தில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கண்பார்வை கோளாறுகளை சரி செய்ய உதவும் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மேலும் கேரட் மற்றும் நெல்லிக்காயில் இருக்கும் சத்துக்கள் முகத்தில் இருக்கும் சுருக்கங்களையும் வறட்சிகளையும் போக்குகிறது. மஞ்சளில் இருக்கும் கிருமி நாசினி கிருமி தொல்லையில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

Next Post

"இந்த காய்கறிகளை சாப்பிடாதீங்க."! பதற வைக்கும் அறிக்கை.! உண்மை என்ன.?

Sat Dec 2 , 2023
உணவு என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. அனைவரும் நல்ல சத்தான உணவை சாப்பிட்டு நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான நீண்ட ஆயுளை விரும்புகின்றனர். எனினும் அவசரகால இயந்திர வாழ்க்கை முறை மற்றும் நமது உணவுப் பழக்க வழக்கங்கள் நோய்களுக்கு காரணமாக அமைகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளிலேயே சில விஷத்தன்மைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். சுரக்காய் சாம்பார் மற்றும் கூட்டுக்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான […]

You May Like