திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 50 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் சுனில்குமார் சிங். இவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் மீது இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், பிரயாக்ராஜ் பகுதியில் தான் வசித்து வந்தபோது காவல்துறையில் பணியாற்றி வரும் சுனில்குமார் சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். பின்னர், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்தார்.

சுமார் 50 முறை பலாத்காரம் செய்ததாகவும், திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது, சுனில்குமார் சிங் மறுத்ததுடன் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் அந்த இளம்பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், சுனில்குமார் சிங் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை காவல்துறையை சேர்ந்தவரே பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.