நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிய சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் எவ்வித அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தே எளிதில் வேலையை முடித்துக் கொள்ளும் வகையில் பல புதிய திட்டங்களையும் எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில், எஸ்பிஐ வங்கியின் RuPay கிரெடிட் கார்டுகள் விரைவில் யுபிஐ உடன் இணைக்கப்படும் என்று எஸ்பிஐ கார்டு சிஇஓ ராம மோகன் ராவ் அமரா தெரிவித்துள்ளார். இந்திய அளவில் RuPay அதிக விநியோகம் செய்வது எஸ்பிஐ வங்கி தான். இவர்கள் யுபிஐ உடன் இணைந்து செயல்படும்போது கூகுள் பே மற்றும் போன் பே மாதிரியான யுபிஐ பயனர்கள் பலன் பெறுவார்கள். இனி எளிதாக போன் நம்பர் மூலமாகவோ அல்லது கியூஆர் கோடு மூலமாகவோ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.