ஆயுர்வேத, சித்தா மற்றும் யுனானி மருந்துகளின் தவறான விளம்பரங்களைத் தடுக்கும் விதியை ரத்து செய்து, ஜூலை 1ஆம் தேதி ஆயுஷ் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தடை விதித்தது. ஆயுர்வேதம், சித்தா அல்லது யுனானி மருந்துகளின் தவறான விளம்பரங்களைத் தடுப்பது தொடர்பான மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகள் 1945 இன் விதி 170, மறு உத்தரவு வரும் வரை சட்டப் புத்தகத்தில் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
பதஞ்சலி மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் அலோபதிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்ததாக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) 2022 இல் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த மனுவை விசாரித்தது.
விசாரணையின் போது, ஐஎம்ஏ தலைவர் ஆர்.வி.அசோகன் மன்னிப்புக் கோரியதை செய்தித்தாள்களில் வெளியிட்டதற்கு, அது தெளிவாக இல்லை என்றும் எழுத்துரு சிறியதாகவும் இருந்தது என்றும் நீதிமன்றம் கடுமையாகக் கண்டனம் செய்தது. அசோகனின் கருத்துக்காக அனைத்து முக்கிய பத்திரிகைகளிலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருந்தது.
இந்திய மருத்துவ சங்க தலைவா் ஆா்.வி.அசோகன் அளித்த பேட்டியில் உச்சநீதிமன்றத்தை விமா்சித்து கருத்து தெரிவித்தாா். அந்த வழக்கு விசாரணையின்போது இந்திய மருத்துவ சங்கத்தையும், மருத்துவா்களின் சிகிச்சை முறைகள் குறித்தும் உச்சநீதிமன்றம் விமா்சித்தது துரதிருஷ்டவசமானது என்று கூறிய அவா், பதஞ்சலி நிறுவனத்தைவிட இந்திய மருத்துவ சங்கத்தை உச்சநீதிமன்றம் அதிகமாக பழித்துரைத்தது என்றும் தெரிவித்தாா். இதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
பிரமாணப் பத்திரம் மூலம் அசோகன் மன்னிப்பு கோரினாா். அப்போது, ‘உச்சநீதிமன்றத்தை விமா்சித்து பத்திரிகைகளுக்கு நீங்கள் பேட்டியளித்ததுபோன்று, உங்களுடைய மன்னிப்பும் முறையாக பிரசுரிக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டு, அவருடைய பிரமாணப் பத்திரத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனா்.
பதஞ்சலியின் விளம்பரங்களில் அலோபதியைத் தாக்கி, சில நோய்களைக் குணப்படுத்துவது குறித்த உரிமைகோரல்களை எதிர்த்து ஐஎம்ஏ தாக்கல் செய்த மனு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் பதஞ்சலி, யோகா குரு ராம்தேவ் மற்றும் அவரது கூட்டாளி பால்கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே மன்னிப்பு கோரியதால் அவர்கள் மீதான அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Read more ; பிரபல நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?