கடந்த 2019-ம் ஆண்டில் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகநாடுகளை அச்சுறுத்தி பெரும் தாக்கத்தையே ஏற்ப்படுத்தியது. பெரும்பாலான நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் வெகுவாக குறைந்திருந்தால் நோய்ப்பரவல் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. இந்நிலையில் BF.7 என்ற புதிய வகை கொரோனா தோற்று தற்போது சீனாவை மிரட்டி வருகிறது. இந்தியாவிலும் இதற்கு 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடைபெற்றது இதன் முடிவில், சீனா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் BF.7 வகை கொரோனா அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மக்கள் அதிக கூட்டம் கூடும் இடங்களில் தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவை அந்த செய்திக்குறிப்பில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் ஏற்கெனவே தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இன்றுவரை ஒரு நாளைக்கு 40 நபர்கள் வரை கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் முன்னதாக தெரிவித்துள்ளார்.