fbpx

மகிழ்ச்சி…! இளைஞர்களுக்குரூ.7,500 ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கும் திட்டம்…! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!

குடிமைப் பணிக்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கும் திட்டம் வரும் அக்டோபரில் தொடங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுப் பணிகளில் குரூப்-4 பிரிவில் உள்ள 10,205 காலி பணியிடங்களை நிரப்பும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 10,205 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் அடையாளமாக, 12 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்; மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், 10 மற்றும் 12-ம் வகுப்பு தரத்தில் பன்முகப் பணியாளர் பணிக்கான தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நான் முதல்வன்’ திட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் என்ற இலக்கை தாண்டி, 13 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

குடிமைப் பணிக்கான முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,000 பேருக்கு மாதம் ரூ.7,500 ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கும் திட்டம் வரும் அக்டோபரில் தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 12,576 பேருக்கும், தற்போது 10,205 பேருக்கும் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மேலும் 17,000 பேருக்கு அரசுப் பணிகள் வழங்கப்பட உள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு 50,000 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Vignesh

Next Post

#Weather: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி...! தமிழகத்தில் அக்டோபர் 4-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

Fri Sep 29 , 2023
தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

You May Like