fbpx

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…! இந்த மாதம் இறுதி வரை விண்ணப்பிக்கலாம்…!

சிறுபான்மையினர்‌ இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின்‌ கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்‌ மத்திய அரசால்‌ சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்‌, கிறித்துவர்‌, சீக்கியர்‌, புத்தமதத்தினர்‌, பார்சி மற்றும்‌ ஜெயின்‌ மதத்தைச்‌ சார்ந்த அரசு, அரசு உதவிபெறும்‌ மற்றும்‌ மத்திய / மாநில அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ கல்வி நிலையங்களில்‌ 2022-23 கல்வியாண்டில்‌ ஒன்று முதல்‌ 10 ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின்‌ https://scholarships.gov.in/ என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் NPS ஆன்லைன்‌ மூலம்‌ விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்‌ 31.10.2022 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியான மாணவ, மாணவிகள்‌ பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு இம்மாதம் இறுதி வரையிலும்‌ மேற்படி இணைய தளத்தின்‌ மூலம்‌ விண்ணப்பிக்கலாம்‌. இத்திட்டம்‌ தொடர்பான கூடுதல்‌ விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர்‌ வளாகத்தில்‌ அமைந்துள்ள மாவட்ட பிற்படு த்தப்பட்‌ டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ரூ.40,000 ஊதியம்...! தமிழக அரசு வேலை… டிகிரி முடித்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

Sat Oct 22 , 2022
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்‌ கீழ்‌, மதுரை மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில்‌ உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வட்டார இயக்க மேலாளர்கள்‌ & வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்‌ பணிகளுக்கு என 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு […]

You May Like