பிரபல எழுத்தாளர் அமரர் கல்கியின் பெயரில் இயங்கிவரும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, ஒவ்வொரு வருடமும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
2023-24-ம் கல்வியாண்டில் ரூ.15 லட்சம் உதவித்தொகை, அவரவர் தகுதிக்கு ஏற்ப வழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகையை பெற, அரசு அங்கீகாரம் பெற்றுள்ள கல்வி நிலையத்தில் படிக்க வேண்டும். 11, 12-ம் வகுப்பு, பாலிடெக்னிக், பட்ட மேற்படிப்பு ஆகிய வகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் பயில்பவராக இருக்கவேண்டும். கடைசியாக எழுதிய தேர்வில் குறைந்தபட்சம் 80 சதவீதம்(சராசரி) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.kalkionline.com என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.