தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் கல்வி மேம்பாட்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களின் சிறார்களுக்கு தொகுப்புஸநிதியிலிருந்து முன்னாள் படைவீரர் சிறார் கல்வி மேம்பாட்டு நிதியுதவியானது 1-ம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ரூ.2,000/-, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ரூ.4,000/-, 5 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ரூ.5,000, 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ரூ.6,000 என உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்தம் விதவையர்கள் அவர்களது சிறார்களுக்கு மற்ற நிதியுதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறவில்லைடுயனில் முன்னாள் படைவீரர் சிறார் கல்வி மேம்பாட்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி, பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.