fbpx

இறுதி வாய்ப்பு… மாதம்‌ தோறும்‌ ரூ.1,000 உதவித்தொகை பெற நாளை கடைசி நாள்….! எப்படி விண்ணப்பிப்பது…? முழு தகவல்…

அரசு பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை படித்த மாணவிகள் உதவித்தொகை பெற நாளை மாலை வரை விண்ணப்பிக்கலாம்.

முதலமைச்சர்‌ ஸ்டாலின் அவர்களால்‌ 05.09.2022 அன்று அரசு பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை படித்து, மேல்‌ படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பு பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ தோறும்‌ 1,000 ரூபாய்‌ வழங்கும்‌ புதுமை பெண்‌ திட்டம்‌ துவங்கப்பட்டது.

தற்போது https://www.pudhumaipenn.tn.gov.in என்ற வலைத்தளம் மூலம் முதலாம்‌ ஆண்டு பயிலும்‌ மாணவிகளும்‌ விண்ணப்பிக்கலாம்‌. இணையத்தில், மாணவிகள்‌, அனைவரும்‌ சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்‌ வாயிலாக நாளை மாலை வரை பதிவு செய்யலாம்‌. அரசு பள்ளிகளில்‌ பயன்ற மாணவிகள்‌ மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியான நபர்கள். மாணவிகள்‌ தங்கள்‌ கல்வி நிறுவனங்கள்‌ மூலமாக மட்டுமே விண்ணப்பம்‌ செய்ய வேண்டும்‌, நேரடியாக விண்ணப்பிக்க கூடாது. இத்திட்டதின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ முறை மற்றும்‌ தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும்‌ கல்வி பயிலும்‌ நிறுவனங்களில்‌ நவம்பர்‌ நாளை வரை சிறப்பு முகாம்கள்‌ நடைபெறும்‌.

மாணவிகள்‌ தவறாமல்‌ அவர்களுடைய ஆதார்‌ அட்டை மற்றும்‌ (கல்வி மேலாண்மை தகவல்‌ திட்ட எண்ணுக்காக EMIS NO) மாற்றுச்‌ சான்றிதழ்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌, மேலும்‌, தற்போது 2,3, மற்றும்‌ 4ம்‌ ஆண்டுகளில்‌ படிக்கும்‌ கல்லூரி மாணவிகள்‌, முதற்கட்டத்தில்‌ இத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்க தவறியவர்கள்‌, தற்போது விண்ணப்பிக்கலாம்‌‌. மேலும்‌, விண்ணப்பம்‌ பூர்த்தி செய்யும்‌ முறையில்‌ மாணவிகளுக்கு சந்தேகங்கள்‌ ஏதும்‌ இருப்பின்‌, சமூக நல இயக்குநாக அலுவலகத்தில்‌ மாநில அளவில்‌ செயல்படும்‌ உதவி மையத்தினை திங்கள்‌ முதல்‌ வெள்ளி வரை, காலை 10 மணி முதல்‌ 5 மணி வரை 9150056809, 9150056805, 9150056801 மற்றும்‌ 9150056810 எண்களில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

மேலும்‌ mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல்‌ அனுப்பலாம்‌, முதலாம்‌ ஆண்டு பயிலும்‌ தகுதிவாய்ந்த மாணவிகள்‌ அனைவரும்‌, விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

Vignesh

Next Post

கருத்தடை மாத்திரைகள் : மருத்துவம் சொல்வது என்ன?

Thu Nov 10 , 2022
இந்திய மருத்துவ நிபுணர் ஒருவர் கருத்தடை மாத்திரைகள் பற்றிய தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். கருத்தடை மாத்திரை உடலில் என்ன செய்கின்றது என்பது பற்றிய விளக்கத்தையும் அளித்துள்ளார். கருவுறாமை என்பது ஒரு வருடத்திற்குப் பிறகும், கர்ப்பம் தரிக்க முயற்சித்த பிறகும், இயற்கையான முறையில் ஒரு தம்பதியர் கருத்தரிக்க இயலாமை ஆகும். நமது ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால் இது வேகமாக வளர்ந்து வரும் பிரச்சனையாக இருந்தாலும், அதைச் சுற்றி பல கட்டுக்கதைகள் உள்ளன. […]

You May Like