12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறலாம். https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படுகிறது. அரசின் அறிவிப்பிற்கு பிறகே இதற்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வை (National Means cum Merit Scholarship) 8-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர் இந்த தேர்வினை எழுதலாம். இதில் தேர்ச்சி பெற்றால் 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு என நான்கு வருடங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் ஆண்டிற்கு ரூ.12,000 வழங்கப்படும். நான்கு ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 48,000 உதவித் தொகை கிடைக்கும். மதிப்பெண் சான்றிதழ், ஆதார் கார்டு, Bonafide சான்றிதழ், வகுப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.