fbpx

தஞ்சாவூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…! மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு…!

நாளை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா ஜனவரி 26-ம் தேதி தொடங்கியது. இந்த விழாவுக்கான பந்தகால் நடும் நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது. ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு, ஆஸ்ரம வளாகத்தில் பந்தல் காலுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா அறங்காவலர் உள்ளிட்டோர் பந்தல் காலை நட்டு வைத்தனர். இந்த நிலையில் நாளை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விடுமுறை ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா இவ்வாண்டு 26.012024 முதல் 30.012024 வரை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ( 10.02.2024 ) சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Vignesh

Next Post

இதுவரை யாரும் செய்யவில்லை...! கடந்த 3 ஆண்டுகளில் 3-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் நிதிஷ் குமார்...!

Mon Jan 29 , 2024
கடந்த மூன்று ஆண்டுகளில் 2 முறை பதவியை ராஜினாமா செய்து தற்பொழுது 3-வது முறையாக பீகார் முதலமைச்சராக நிதீஷ் குமார் பதவி ஏற்று கொண்டார் கடந்த 2020-ம் ஆண்டு பிஹாரில் நடந்த சட்டபேரவைதேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்றார் நிதீஷ் குமார். அதன் பிறகு பாஜகவுடன் கருத்து முரண்பாட்டால், 2022-ல் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து […]

You May Like