fbpx

பெற்றோர்களே கவனம்!! ஊஞ்சலில் விளையாடிய சிறுவன் துடிதுடித்து மரணம்..

சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர், வேலாயுதம். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவரது இளைய மகன் செல்வா, 7ம் வகுப்பு படித்து வந்துள்ளான். சம்பவத்தன்று, வேலாயுதம் கண்ணில் மருந்து ஊற்றி விட்டு படுத்துள்ளார். அப்போது சிறுவனின் தாய், தனது மூத்த மகனை வெளியில் அனுப்ப வீட்டின் வாசலுக்கு சென்றுள்ளார். அப்போது சிறுவன் செல்வா, வீட்டில் புடவையால் கட்டிவைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் சுற்றி, சுற்றி விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக, புடவை கழுத்தில் சிக்கியுள்ளது. இந்நிலையில், உறவினர் ஒருவர் எதர்ச்சியாக இவர்களின் வீட்டிற்க்கு வந்துள்ளார். அப்போது சிறுவன் செல்வா சுயநினைவின்றி இருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு சிறுவனின் பெற்றோர் கதறி துடித்துள்ளனர். மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கண்ணகி நகர் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Maha

Next Post

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு...? தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் கோரிக்கை...!

Tue Oct 3 , 2023
காலாண்டு விடுமுறையை நீட்டிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்; காலாண்டு விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்கள் பள்ளித் தொடர்பான பலப் பணிகளையும், மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தி , மதிப்பெண்கள் வழங்கும் பணிகளையும் மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே இந்த 5 நாட்கள் விடுமுறை போதுமானதாக இல்லை. ஒவ்வொரு ஆண்டும் காலாண்டு விடுமுறை குறைந்தபட்சம் 9 நாட்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு […]

You May Like