கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா மேல் புளியங்குடியை சேர்ந்தவர் 24 வயதான ஆனந்த். இவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர் வசித்து வரும் அதே பகுதியில், 17 வயது சிறுவன் ஒருவர் வசித்து வருகிறார். இவர், அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரும் நன்கு பழகி வந்துள்ளனர். இந்நிலையில்,ஒரு கட்டத்தில் ஆனந்த்திற்கு மாணவன் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் எப்படியாவது சிறுவனை அடைய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இதையடுத்து, ஆனந்த் அந்த சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன், ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் ஆனந்த், பலமுறை சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுவன் இதற்கு சம்மதம் தெரிவிக்காமல் மறுத்து வந்துள்ளார். இதனால் அவருக்கு சிறுவன் மீது கடும் கோவம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த மாணவன் இன்ஸ்டாகிராம் மூலம் பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இது குறித்து ஆனந்த்திற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் இன்ஸ்டாகிராமில் சிறுவன் மற்றும் அந்தப் பெண் பேசியதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துள்ளார். மேலும், ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காவிட்டால் இதை வெளியில் மற்றவர்களிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், ஆனந்தின் செல்போனை பிடுங்கி உடைத்துள்ளார்.
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த ஆனந்த், கடந்த 3.10.2023 அன்று பள்ளிக்கூடத்துக்கு சென்ற சிறுவனை வழிமறுத்து கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆனந்தை கைது செய்தனர். மேலும் அவர் மீது கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், நேற்று இவ்வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ் தீர்ப்பளித்தார்.
ஆனந்த் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவர் தனது தீர்ப்பில், அவருக்கு ஆயுள் தண்டனையும் ₹20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Read more: பிரியாணிக்கு ஆசைப்பட்ட 75 வயது மூதாட்டி; வீட்டிற்க்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த வாலிபர்..