fbpx

ஒருதலைக் காதல்.. வகுப்பறையில் ஆசிரியர் குத்திக்கொலை..!! – கொந்தளித்த அன்பில் மகேஷ்

தஞ்சை அரசுப் பள்ளியில் 26 வயதாகும் ஆசிரியை ரமணி என்பவர் இன்று காலை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே சம்பவம் நடந்திருக்கிறது. இதனால் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த சக ஆசிரியர்கள், ஆசிரியை ரமணியை மீட்டு அரசு மருததுவமனைக்கு சிகிக்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆசிரியை ரமணி உயிரிழந்தார்.

இதனிடையே கத்தியால் குத்திய மதன் குறித்து உடனடியாக போலீசுக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர் இதையடுத்து விரைந்து வந்து மதனை பிடித்து கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியை ரமணியை ஒரு தலையாக மதன் காதலித்து வந்ததாக கூறியுள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்ய விருப்பமில்லை என்று கூறியதால் ரமணியை கத்தியால் குத்திக் கொன்றதாகவும் மதன் கூறியுள்ளார். கொல்லப்பட்ட ஆசிரியை ரமணி நான்கு மாதம் முன்பு தான் பணியில் சேர்ந்துள்ளார்.

ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் உறுதி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது.

தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும், மாணவர்களுக்கும், சக ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்”. இவ்வாறு அமைச்சர் அன்பில் தெரிவித்துள்ளார்.

Read more ; சென்னை மக்கள் கவனத்திற்கு.. இந்த வழித்தடத்தில் புறநகர் ரயில்கள் இயங்காது..!! – தெற்கு இரயில்வே

English Summary

School Education Minister Anbil Mahes Poiyamozhi has condemned violence against teachers.

Next Post

கனமழை..!! இனி இரவே விடுமுறையை அறிவிக்க வேண்டும்..!! பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு..!!

Wed Nov 20 , 2024
Minister Anbil Mahesh has stated that depending on the amount of rain, orders have been issued to declare the first day of the week as a holiday.

You May Like