fbpx

அடிதூள்…! 15 % பள்ளி கட்டணம் திருப்பி செலுத்த வேண்டும்…! உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!

பெற்றோருக்கு நிம்மதி அளிக்கும் வகையில், கொரோனா காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 15 சதவீதத்தை தனியார் பள்ளிகள் தள்ளுபடி செய்யுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீதிமன்ற உத்தரவுப்படி, அடுத்த கல்வி அமர்வில் 15 சதவீத கட்டணத்தை கணக்கிட்டு மாற்றி அமைக்க வேண்டும். படிப்பை பாதியில் நிறுத்திய அல்லது பள்ளியை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு, அந்தத் தொகையை கணக்கிட்டு அவர்களுக்கே திருப்பித் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.

தமிழக அரசின் கல்வி உதவித்தொகை..!! இன்று முதல் தொடக்கம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!!

கொரோனா தொற்றுநோய் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கட்டணங்களைக் குறைக்கும் வகையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்திடம் பெற்றோர்களின் அமைப்புகள் சில நிவாரணங்களைக் கோரி வருகின்றன. அனைத்து மனுக்களையும் ஜனவரி 6, 2022 அன்று உயர்நீதிமன்றம் விசாரித்தது. தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் நீதிபதி ஜேஜே முனீர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

Vignesh

Next Post

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன்...! SBI-யின் புதிய ஒப்பந்தம்...!

Tue Jan 17 , 2023
விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவது தொடர்பாக தேசிய கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் பாரத ஸ்டேட் வங்கிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மின்னணு மாற்றத்தக்க கிடங்கு ரசீதுக்கு (e.NRS) ஈடான, பிரத்யேக நிதியத்திற்குரிய உற்பத்தி சந்தைப்படுத்துதல் கடன் என்றழைக்கப்படும் புதிய வகை கடன் தொடர்பாக விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தக் கடன் நடைமுறையில், செயல்பாட்டுக் கட்டணங்களோ, கூடுதல் பிணையங்களோ […]

You May Like