தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (25) என்ற இளைஞருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் அந்த இளைஞர் தனது திருமணமானதை மறைத்து 17 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை தெரிவித்து வெளியூருக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் தான் தன்னுடைய மகளை காணவில்லை என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அஜித்குமாரின் செல்போன் சிக்னலை வைத்து அவர் இருக்கும் இடத்தையும் காவல்துறையினர் அறிந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, அதன் பிறகு பாவூர்சத்திரம் காவல் துறையினர் இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மாணவிக்கு அஜித்குமார் பாலியல் தொல்லை வழங்கியது தெரியவந்ததை தொடர்ந்து, அஜித்குமார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆய்வு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.