தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் 30 வயதான கண்ணன் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 11-ம் தேதி, இவர் தனது டூவீலரில் சென்றுள்ளார். அவர் செல்லும் வழியில், மூன்றாம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளிக்கு செல்வதற்காக சாலையோரத்தில் நின்றுள்ளார். இதைப் பார்த்த கண்ணன், “என்னுடன் பைக்கில் வா, நான் உன்னை பள்ளியில் கொண்டு விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.
இதனை நம்பிய சிறுமியும் கண்ணன் பைக்கில் ஏறியுள்ளார். இதையடுத்து, சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்ற கண்ணன், சிறுமியை பள்ளியில் விடாமல், அப்பகுதியில் உள்ள புதர்மண்டி கிடந்த பகுதி ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி, தன்னை யாரவது காப்பாற்றும் படி கத்தியுள்ளார். ஆனால் அங்கு யாரும் வரவில்லை.
மேலும், தனது வீட்டிற்க்கு சென்ற சிறுமி, தனக்கு நடந்த கொடூர சம்பவங்களை எல்லாம் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக நடந்த சம்பவம் குறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கண்ணனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கண்ணன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கண்ணனை இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்.
Read more: போலீஸுக்கு பயந்து லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த விஏஓ அதிகாரி..!! பின்னணி இதோ..