தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதான உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் 20 வயதான அரவிந்த் என்ற இளைஞர் ஒருவரை உண்மையாக காதலித்து வந்துள்ளார். அரவிந்தும், நான் உன்னை மட்டும் தான் காதலிக்கிறேன், உன்னை மட்டும் தான் திருமணம் செய்து கொள்வேன் போன்ற வசனங்களை பேசி, உஷாவை நம்ப வைத்துள்ளார். இந்நிலையில், அரவிந்த் உஷாவை சவுக்குத் தோப்புக்குள் அழைத்துள்ளார். உஷாவும், தனது காதலன் மீது இருந்த பேரன்பால், அவருடன் தோப்புக்குள் சென்றுள்ளார். ஆனால் அங்கு, அரவிந்த் உஷாவை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல், அரவிந்தின் நண்பரான 20 வயது சரண் என்பவரும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உஷா, அலறி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்து சிறுமியை மீட்டனர். அக்கம்பக்கத்தினர் வருவதை பார்த்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், சிறுமி உஷாவை பாலியல் வன்கொடுமை செய்த சரண், அரவிந்த் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: எச்சரிக்கை!!! பிரபல தீம் பார்க்கில், 2 பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்..