fbpx

பள்ளி மாணவர்களுக்கு மாலையில் ஸ்நாக்ஸ் வழங்கப்படும்.. மாநகராட்சி பட்ஜெட்டில் வெளியான அசத்தல் அறிவிப்பு..

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை மாநகராட்சியின் 2023-34-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.. இந்த பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 83 புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளதாக பிரியா தெரிவித்தார்.. மேலும் “ சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 139 பள்ளீகளுக்கு ரூ.15 கோடியில் கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும்.. மாநகராட்சி உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிப்பட்டுள்ளது..

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.. பள்ளி, மாணவர்களுக்கு, கற்றல், கற்பித்தல் நடவடிக்கையில் மாதிரி ஐ.நா. சபை குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வகங்களை மேம்படுத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.. பள்ளி

மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.. சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும்.. இதற்காக ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், சாலைகளை மேம்படுத்தப்படும்.. சென்னையில் வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்க, வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை குழு என்ற குழு அமைக்கப்படும்..” உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பிரியா வெளியிட்டார்..

Maha

Next Post

அமைச்சரின் ஆதரவாளர் வெட்டி படுகொலை….! புதுச்சேரியில் பதற்றம் போலீஸ் குவிப்பு…..!

Mon Mar 27 , 2023
புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே இருக்கின்ற கணுவா பேட்டை வன்னியர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். மேலும் மங்கலம் தொகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று இரவு பேக்கரி கடையில் நின்று கொண்டிருந்த சமயத்தில் 3 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று செந்தில்குமார் மீது வெடிகுண்டை வீசி சென்றது. இதனால் நிலைகுலைந்த அவரை அந்த கும்பல் மீண்டும் […]

You May Like