மேற்குவங்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது..
மேற்கு வங்கம் மாநிலத்தில் ஜனவரி 2019 முதல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்ததில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட மேற்பார்வையிட்ட குழு முறைகேடு நடந்ததாக அறிக்கை அளித்ததை தொடர்ந்து இதுகுறித்து சிபிஐ விசாரணைநடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் பணமோசடி நடந்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக நடந்த முறைகேடு வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தாவின் உதவியாளர் அர்பிதா சாட்டர்ஜி வீட்டில் ரூ.20 கோடி சிக்கியது.. பின்னர் அர்பிதா கைது செய்யப்பட்டார்.. இதை தொடர்ந்து இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி வீட்டில் சோதனை நடத்தினர்.. அவரின் வீட்டில்அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 26 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.. இந்த நிலையில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யபப்ட்டுள்ளார்..