உத்தரபிரதேசம் கான்பூர் பள்ளி ஒன்றில் வகுப்பறையில் யூனிபார்மில் மூன்று மாணவிகள் சண்டையிடும் போது ஒருவரது முடியை ஒருவர் இழுத்து ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டனர். அவர்கள் தலைமுடியை ஒருவருக்கொருவர் பிடித்து இழுத்து ஆவேசமாக திட்டி சண்டை போட்டுக்கொண்டனர். ஆரம்பத்தில் இந்த வீடியோவை பார்த்ததும், மாணவிகள் விளையாட்டுக்காக இப்படி செய்வதாக தோன்றியது. ஆனால், நிஜமாகவே மாணவிகள் தாக்கி கொண்டது பெற்றோரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பு நேரத்திலேயே நேரத்தில் இந்த சண்டை நடந்துள்ளது. மூன்று பெண்களும் அடித்துக் கொள்வதை பார்த்த மற்ற மாணவிகள், சண்டையை தடுக்க முயற்சி செய்துள்ளனர், ஆனால் அந்த மாணவிகளால் அவர்களை தடுக்க முடியவில்லை. சண்டையை நிறுத்துங்கள் என்று கத்துகிறார்கள். அப்போதும் மூன்று மாணவிகளும் நிறுத்தவில்லை. மூன்று பேரும் ஒருவரையொருவர் தலைமுடிகளை பிடித்து கொண்டு, கடைசிவரை விடவில்லை. நடுநடுவே அங்கிருந்த டேபிள் மீது மூன்று பேயின் தலைகளும் இடித்து கொண்டன.
இந்த வீடியோவை அமித் சிங் என்ற பத்திரிகையாளர் பதிவிட்டுள்ளார். இதை பதிவிட்ட உடனேயே, ஒரு லடசம் பார்வைகள் வந்துள்ளனர். 300 க்கும் மேற்பட்ட ரீட்வீட்கள் செய்துள்ளனர். மாணவ, மாணவிகளின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் குறைந்து வருகிறது என்பதை காட்டும்விதமாகவே, இந்த வீடியோ அமைந்துள்ளது என்றும், புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் மாணவிகளே இதுபோன்று நடந்து கொள்ளலாமா, என்று பொதுமக்கள் கேள்விகளை கேட்டு வருகிறார்கள். ஆனால் இந்த மூன்று மாணவிகளும் எதற்காக சண்டை போட்டுக் கொண்டார்கள் என்று இதுவரை தெரியவில்லை.