fbpx

2.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான தண்ணீரை குடித்த விஞ்ஞானி.. அதன் சுவை இப்படி தான் இருந்ததாம்…

வாரக்கணக்கில் மூடி வைக்கப்படாமல் இருக்கும் தண்ணீரைக் குடிப்பீர்களா என்று கேட்டால், இல்லை என்பதே பலரின் பதிலாக இருக்கும்.. ஆனால் விஞ்ஞானி ஒருவர், 2.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான தண்ணீரை குடித்துள்ளாராம்.. எல்லா நீரும் ஏதோ ஒரு வகையில் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மேலும் இப்போது, புதிய தண்ணீருக்கும் பழைய தண்ணீருக்கும் உள்ள எளிய வித்தியாசத்தை விஞ்ஞானிகள் எடுத்துரைத்துள்ளனர்.

2013 ஆம் ஆண்டில், ஒரு விஞ்ஞானிகள் குழு கனடா நாட்டின் சுரங்கத்தில் உள்ள நீர் பாக்கெட்டுகள் பூமியின் மேற்பரப்பிற்கு கீழே கிட்டத்தட்ட 1.5 மைல் தொலைவில் இருப்பதைக் கண்டுபிடித்தது.. கனடாவின் ஒண்டாரியோவில் உள்ள டிம்மின்ஸ் என்ற இடத்தில் உள்ள நீர், கிரானைட் போன்ற பாறைகளுக்கு இடையே மெல்லிய பிளவுகளில் சிக்கியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாதிரிகளை எடுத்து அந்தப் பகுதியை ஆய்வு செய்த பிறகு, நீர் 2.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதை விஞ்ஞானிகள் தீர்மானித்தனர்..

அதன் பிறகு, ஆய்வின் முதன்மை ஆராய்ச்சியாளர், பேராசிரியர் பார்பரா ஷெர்வுட் லோலர், அந்த தண்ணீரை குடித்தார்.. இதுகுறித்து தனது அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.. அவர் அளித்த பேட்டியில் கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமையான நீரின் சுவை விவரித்தார்.. இதுகுறித்து பேசிய அவர் “தண்ணீருக்கும் பாறைக்கும் இடையே உள்ள எதிர்வினைகள் காரணமாக, இது மிகவும் உப்புத்தன்மை வாய்ந்தது. இது குழாய் நீரை விட பிசுபிசுப்பானது. இது மிகவும் லேசான சிரப்பின் நிலைத்தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த தண்ணீர் ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொள்ளும்போது அது ஆரஞ்சு நிறமாக மாறும், ஏனெனில் அதில் உள்ள தாதுக்கள் உருவாகத் தொடங்குகின்றன..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

அசத்தலான அறிவிப்பு...! அரசு ஊழியர்களுக்கு விடுமுறை...! தமிழக அரசு புதிய அரசாணை...! முழு விவரம் இதோ...

Mon Feb 20 , 2023
கொரோனா காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; அரசு ஊழியரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வசித்தாலோ அந்த தனிமை படுத்தப்பட்ட காலம் சிறப்பு விடுமுறை காலமாக கருதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பெண் பணியாளர்களை பொறுத்தவரை கர்ப்பிணி பெண் ஊழியர்களுக்கு […]

You May Like