fbpx

“இஸ்லாமிய வாக்குகளை குறி வைக்கும் அதிமுக..” SDPI கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை.! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இந்தியாவில் பாராளுமன்றங்களுக்கான பொது தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி காலம் முடிவடைய இருப்பதை தொடர்ந்து பாராளுமன்றங்களுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா என்ற மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் தமிழகத்தைச் சார்ந்த திமுக விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளும் இடம்பெற்றுள்ளன . கடந்த தேர்தலில் அதிமுக கட்சி பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொண்டர்களின் கோரிக்கையை ஏற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்து கொண்டதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக கட்சியின் தலைமையில் வலிமையான தேர்தல் கூட்டணியை அமைக்க அந்தக் கட்சி முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் SDPI கட்சி மதுரையில் நடத்திய மாநாட்டில் உன்னால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. SDPI கட்சியை தங்களது கூட்டணியில் இணைப்பதன் மூலம் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைக்கும். மேலும் வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட எஸ்டிபிஐ விருப்பம் தெரிவித்திருக்கிறது. அதிமுக மற்றும் எஸ்டிபிஐ தொடர்பான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Post

'EPS' தரப்புக்கு மீண்டும் ஒரு வெற்றி..!! அதிமுக வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Tue Feb 6 , 2024
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. அதிமுகவில் உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை மேலும் புதிய நிர்வாகிகளின் நியமனத்தை தடை செய்ய வேண்டும் எனக் கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார் . இந்த வழக்கு தொடர்பாக பதிலளித்த தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் […]

You May Like