முதலமைச்சர் முக.ஸ்டாலின் எழுதியுள்ள திராவிட மாடல் புத்தகத்தை வாங்கி படிக்க ஆர்வமாக உள்ளதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திராவிட மாடம் என்பது ஒரு வேடிக்கை. திராவிடம், திராவிடம் என பேசுவதற்கு காரணமே நாங்கள் தான். பிரபாகரனின் பிள்ளைகளாகிய நாங்கள் வந்த பிறகே திரவிடத்தை அதிகமாக பேசுகின்றனர். திராவிட மாடல் என்ற புத்தகம் வந்தால் நானும் வாங்கி படிக்க ஆர்வமாக உள்ளேன்” என்றார்.

இதைத்தொடர்ந்து ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து பேசிய அவர், ”ராகுல்காந்தி அரசியல் செய்கின்றாரா என்று கேள்வி எழுப்பினார். ராகுல்காந்தியால் சொந்த தொகுதியிலேயே நின்று வெல்ல முடியவில்லை. எதிர்கட்சியாக காங்கிரஸ் இயங்கவில்லை என குற்றம்சாட்டினார். 50 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சிசெய்து கொண்டு வரமுடியாத மாற்றத்தை, 5 மாதங்களில் ராகுல்காந்தி நடைபயணம் செய்து மாற்றிவிடுவாரா? என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜகவினர் ஆளுநரை சந்தித்துள்ளனரே என்ற கேள்விக்கு, திமுக, பாஜக இருவருக்கும் வேலை இல்லை. அடிக்கடி இதுபோன்று வேடிக்கை காட்டுவார்கள் நமக்கு நிறைய வேலை இருக்கு, அவர்களை பற்றி பேச வேண்டாம்” என தெரிவித்தார்.