fbpx

மீம்ஸ்களில் தெறிக்கவிட்ட சீம்ஸ் நாய் மரணம்!… நெட்டிசன்கள் இரங்கல்!

மீம்ஸ் மூலம் நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீம்ஸ் நாய் உடல்நலக் குறைவால் உயிரிழந்தது.

சமீப காலங்களில் பலரையும் ஈர்த்தது சீம்ஸ் எனும் நாய். இதன் புகைப்படத்துடன் கூடிய மீம்கள் வெடிசிரிப்பை வரவழைக்கக்கூடியவை. ஹாங்காங்கை சேர்ந்த பெண் ஒருவர் ஷிபா இன நாய் ஒன்றை வளர்த்துவந்தார். இந்த நாய்க்கு பால்ட்சீ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பால்ட்சீயின் படத்தை எல்லா மீம்களிலும் நெட்டிசன்கள் பயன்படுத்த தொடங்கினர். இணையதளங்களை ஆக்கிரமித்த இந்த நாய் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. தமிழக சூழலிலும் சீம்ஸ் என செல்லமாக அழைக்கப்படும் இந்த நாயை கொண்டு பல மீம்களை நெட்டிசன்கள் உருவாக்கி வந்தனர். இப்படியிருக்கக் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த பால்ட்சீ சிகிச்சையின் போது இறந்துவிட்டதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Kokila

Next Post

திரும்பவும் முதல்ல இருந்தா?… அமெரிக்கா, இஸ்ரேலில் பிஏ.2.86 புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!… உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

Sun Aug 20 , 2023
கொரோனாவின் வீரியம் சமீப காலமாக குறைந்து இருக்கும் நிலையில், பிஏ.2.86 என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல கோடி கணக்கில் உயிர் பலியை எடுத்தது. இதன் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், இந்த வைரஸ் அடுத்தடுத்து மாறுபாடு அடைந்து புதிய வகை வைரசாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை […]

You May Like