fbpx

த்ரிஷா பகிர்ந்து கொண்ட இளமை மற்றும் அழகின் ரகசியம்… நீங்களும் இதையே ஃபாலோ பண்ணுங்க.!

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கனவு பணியாக விளங்கி வருபவர் த்ரிஷா. இத்தனை ஆண்டுகளாக தனது இளமையும் அழகையும் எவ்வாறு பராமரித்து வருகிறார் என்பது குறித்து அவரே மனம் திறந்து இருக்கிறார். சரும அழகையும் இளமையையும் என்றென்றும் பேணி பாதுகாக்க த்ரிஷா பின்பற்றி வரும் டயட் மற்றும் லைப் ஸ்டைல் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.

த்ரிஷா தன்னுடைய அழகு மற்றும் இளமைக்கு மிக முக்கிய காரணமாக தன்னுடைய டயட்டை குறிப்பிடுகிறார். டயட் என்று வந்து விட்டால் மிகவும் தீவிரமாக அதனை பின்பற்றுவேன் எனக் கூறும் த்ரிஷா டயட் பின்பற்றும் நாட்களில் ஜங்க் உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விடுவாராம். மிகவும் கட்டுப்பாடான மற்றும் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை மட்டும் குறிப்பிட்ட அளவில் எடுத்துக் கொள்வாராம்.

மேலும் டயட் பின்பற்றி வரும் காலங்களில் சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு மற்றும் எலுமிச்சம் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது த்ரிஷாவின் வழக்கமாம். இதுபோன்று கட்டுப்பாடான டயட்டை கடைபிடிக்கும் போது தனது முக பொலிவில் மிகப்பெரிய மாற்றங்களை கண்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். கட்டுப்பாடான டயட்டுடன் கடினமான உடற்பயிற்சியும் தனது இளமையின் ரகசியத்திற்கு முக்கிய காரணம் என பட்டியலிடுகிறார்.

மேலும் உடலுக்கு டயட் மற்றும் உடற்பயிற்சி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு ஓய்வும் தேவை எனக் கூறுகிறார். தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை கட்டாயமாக தூங்கி விடுவதாகவும் தெரிவித்திருக்கிறார். இது அவரை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு எப்போதும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கிறது. என தெரிவித்துள்ளார். மேலும் முகம் பொலிவுடன் பளபளப்பாக இருப்பதற்கு தண்ணீர் மிகவும் அவசியம் என குறிப்பிட்டு இருக்கும் த்ரிஷா ஒரு நாளைக்கு 4 முதல் 4.5 லிட்டர் தண்ணீர் குடிக்க தவறுவதில்லை எனவும் கூறி இருக்கிறார். இதுதான் தனது இளமையின் ரகசியம் என்று தெரிவித்திருக்கிறார் பொன்னியின் செல்வன் நாயகி.

Next Post

"தலையில் இருக்கும் பொடுகு நீங்க…" இந்தத் தேங்காய் பால் வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்க.!

Mon Nov 27 , 2023
உங்கள் தலையில் பொடுகு பாடாய்ப்படுத்துகிறதா.? வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த மருந்தை பயன்படுத்திப் பாருங்கள். இதன் பிறகு ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். சிலருக்கு காய்ந்த பொடுகு தொல்லை அதிகமாக இருக்கும். அதற்கு நாம் கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களைக் கொண்டு செய்யப்படும் மருந்தை பயன்படுத்தினால் சிறந்த தீர்வு கிடைக்கும். இதற்கு முதலில் தேங்காய் பால் ஒரு கிளாஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு வால்மிளகு எடுத்து அதனை […]

You May Like