பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 16 வயது இந்து சிறுமி கடத்திச் செல்லப்பட்டு, அவருக்கு இஸ்லாமிய நபருடன் வலுக்கட்டாயமாக திருமணம் நடைபெற்றது..
பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் சிந்து மாகாணத்தின் காசி அகமது நகரில் உள்ள உன்னார் முஹல்லாவில், 16 வயது இந்து சிறுமி கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டார். பின்னர், அந்த சிறுமிக்கு, மீர் முகமது ஜோனோ கிராமத்தைச் சேர்ந்த கலீல் ரெஹ்மான் ஜோனோ என்ற முஸ்லீம் நபருடன் கட்டாய திருமணம் நடைபெற்றது..
ஆனால் இந்து சிறுமி கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட உடனேயே, நவாப்ஷாவில் உள்ள ஜர்தாரி ஹவுஸ் முன் இந்துக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.. மேலும் சிறுமியை மீட்க முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
போராட்டக்காரர்கள் சர்தாரி மாளிகையை நெருங்கியதும், முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்குச் செல்வதைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், சிறுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக உறுதியளித்து, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அவர்களை சமாதானப்படுத்தினர். எனினும் காவல் துறையினரிடம் இதுகுறித்து புகார் அளித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்து பஞ்சாயத்து துணைத் தலைவர் லஜ்பத் ராய் தெரிவித்துள்ளார்.. கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்..
மற்றொரு பஞ்சாயத்து தலைவர் மனோமல் கூறுகையில், கடத்தப்பட்ட சிறுமிக்கு மதம் மாறுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது., எந்த நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்படவில்லை…” என்று தெரிவித்தார்.. பாகிஸ்தானில் இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ந்தாலும், இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை. நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது..