80-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சுஹாசினி. மூத்த நடிகர் சாரு ஹாசனின் மகளான இவர் தயாரிப்பாளரும், இயக்குநரும் கூட. அதோடு உதிரிப்பூக்கள், காளி, ஜானி, நண்டு, மெட்டி, ராஜ பார்வை, மீண்டும் கோகிலா ஆகியப் படங்களில் துணை ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர், 1988ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னத்தை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு நந்தன் என்ற மகன் இருக்கிறார்.

இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் இயக்குனர் மணிரத்னம். இவர் 1985ஆம் ஆண்டு வெளியான பகல் நிலவு என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.
இயக்குனர் மணிரத்னம் 1988ஆம் ஆண்டு நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நந்தன் மணிரத்னம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், மணிரத்னம்-சுஹாசினி திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.