fbpx

வாவ்…! 14 முதல் 45 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி…! முழு விவரம் உள்ளே…!

14 முதல் 45 வயதுக்குட்பட்ட சிறுபான்மையினத்தவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சகம் சார்பில் பட்டியலிடப்பட்ட 6 சிறுபான்மையின சமூகத்தைச்சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிப்புத்திட்டம் ( SEEKHO AUR KAMAO SCHEME) அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 14 முதல் 45 வயதுக்குட்பட்ட சிறுபான்மையினத்தவர்களுக்கு அவர்களது தகுதிகளுக்கேற்ப திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

சிறுபான்மையின மக்களை சுய தொழில் செய்பவர்களாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் இலக்காகும்.இந்தத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள திட்ட செயலாக்க ஏஜென்சிகள் மூலம் வழங்கப்படுகின்றன.

தற்போது இந்தத் திட்டம் பிரதமரின் விகாஸ் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் திறன் மேம்பாட்டை உறுதி செய்வதுடன், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய சிறுபான்மையின பெண்களை தொழில் முனைவோராக மாற்றுவும் உதவும். இதுவரை 4.68 லட்சம் பயனாளிகள் இந்தத் திட்டத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் 2.28 லட்சம் பயனாளிகள் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற்று இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Vignesh

Next Post

இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை.. கடந்த காலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட MP ; MLA-க்களின் பட்டியல் இதோ..

Sat Mar 25 , 2023
2019ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என அனைவரும் எப்படி மோடி என்ற பொதுவான பெயரை வைத்துள்ளனர் என்று கூறியிருந்தார்.. இதையடுத்து பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.. கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல்காந்தி குற்றவாளி என்று […]

You May Like