fbpx

Seeman | 14 மருத்துவர்கள், 4 பேராசிரியர்கள்..!! வேட்பாளர்களை அதிரடியாக களமிறக்கும் நாம் தமிழர்..!!

நாம் தமிழர் கட்சி 14 மருத்துவர்கள் அடங்கிய வேட்பாளர்களுடன் மக்களவை தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னம் பிரச்சனை ஒருபுறம் இருந்தாலும், மக்களவை தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர் தேர்வானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இதுவரை 38 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வேட்பாளர்களும் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் மார்ச் 23 அல்லது 24ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட உள்ள வேட்பாளர்களில் 14 பேர் மருத்துவர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இவர்களுடன் 4 பேராசிரியர்கள், 5 பொறியாளர்கள் என பல்வேறு பட்டதாரி வேட்பாளர்களுடன் சேர்ந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளதாக கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மருத்துவர்களும், ஆசிரியர்களும் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாக அமையும் என்று நிர்வாகிகள் கருதுகின்றனர்.

Read More : CM Stalin | நாளை மும்பை விரைகிறார் முதல்வர் முக.ஸ்டாலின்..!! இந்த திடீர் பயணம் எதற்காக தெரியுமா..?

Chella

Next Post

PM SHRI பள்ளிகளை தொடங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்..!! அண்ணாமலை ஹேப்பி..!!

Sat Mar 16 , 2024
இந்தியா முழுவதும் PM SHRI பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அந்த திட்டத்தை செயல்படுத்த கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று நேற்று மார்ச் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியான பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், ”மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான […]

You May Like