CM Stalin | நாளை மும்பை விரைகிறார் முதல்வர் முக.ஸ்டாலின்..!! இந்த திடீர் பயணம் எதற்காக தெரியுமா..?

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் தேசிய ஒற்றுமை நியாய யாத்திரை மும்பையில் நாளை நிறைவடைகிறது. இதனையடுத்து, மும்பையில் I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராகுல் தலைமையிலான பாரத் ஜோடோ நியாய யாத்ரா மகாராஷ்டிராவில் நாளை (மார்ச் 17 ஆம் தேதி) முடிவடையும் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார். இந்த இந்தியா பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு நாளை இரவே சென்னை திரும்புகிறார். பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சிவசேனா (யுபிடி) தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே, என்சிபி (சரத்சந்திர பவார்) தலைவர் சரத் பவார் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

ராகுல் காந்தியின் யாத்திரை இன்று பிற்பகல் மும்பை வந்தடைகிறது. மக்களவைத் தேர்தல் தேதி குறித்து இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், மத்திய மும்பை தாதர் பகுதியில் உள்ள சிவாஜி பூங்காவில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

Read More : Fake News | உண்மையில் அமிதாப் பச்சனுக்கு நடந்தது என்ன..? ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின் பின்னணி..!!

Chella

Next Post

Seeman | 14 மருத்துவர்கள், 4 பேராசிரியர்கள்..!! வேட்பாளர்களை அதிரடியாக களமிறக்கும் நாம் தமிழர்..!!

Sat Mar 16 , 2024
நாம் தமிழர் கட்சி 14 மருத்துவர்கள் அடங்கிய வேட்பாளர்களுடன் மக்களவை தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னம் பிரச்சனை ஒருபுறம் இருந்தாலும், மக்களவை தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியில் வேட்பாளர் தேர்வானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இதுவரை 38 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வேட்பாளர்களும் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரும் மார்ச் 23 அல்லது 24ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர் […]

You May Like