அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு காலை உணவு திட்டத்தை நடத்தி வரும் நிலையில், வாரத்தில் ஏழு நாட்களில் 5 நாட்களில் உப்புமா போடுகிறார்கள். இது என்ன காலை உணவு திட்டமா அல்லது உப்புமா கம்பெனி திட்டமா என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் கல்வி வளத்துக்காக என்ன செய்துள்ளது? ஒரே ஒரு திட்டங்களை சொல்லுங்கள் பார்ப்ப்போம்?’ என்று நிரூபர்களை பார்த்து கேட்டார். அப்போது ஒரு செய்தியாளர் ‘அரசு பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் இருக்கிறதே’ என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த சீமான், ”திராவிட கட்சிகள் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தும் காலையில் சாப்பிட்டுக்கூட வர முடியாத அளவுக்கு எமது பிள்ளைகளை வறுமையில் வைத்திருப்பது ஏன்? இது என்ன தமிழ்நாடா? இல்லை சோமாலியாவா?, கென்யாவா? அல்லது நைஜீரியாவா? தமிழ்நாட்டில் தான் எல்லா வளமும் இருக்கிறதே. பிறகு என்ன?? அப்படியே பார்த்தாலும் காலை உண்வுத்திட்டத்தில் குழந்தைகளுக்கு பாலும், முட்டையுமா கொடுக்கிறார்கள்? 7 நாளில் 5 நாட்கள் உப்புமா தான் போடுகிறார்கள். நீங்கள் (அரசு) நடத்துவது உப்புமா கம்பெனிதானே” என்று விமர்சனம் செய்தார். சீமானின் இந்த பேச்சுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
Read more ; தொட்ட எல்லாம் படமும் செம ஹிட்டு.. ரஜினி, அஜித்-க்கு லக்கி ஹீரோயின்..!! யாரு தெரியுமா..?