fbpx

அசத்தல்…! வரும் 15-ம் தேதி கடன் திட்ட விழிப்புணர்வு முகாம்…! இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்க வேண்டும்…!

மகளிருக்கான சுய தொழில் கடன் திட்ட விழிப்புணர்வு முகாம் வருகின்ற 15-ம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியேற்றுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ சுய வேலைவாய்ப்பை உருவாக்கும்‌ பொருட்டு மாவட்ட தொழில்‌ மையம்‌ முலம்‌ வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌ , புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌ திட்டம்‌ மற்றும்‌ பிரதம மந்திரியின்‌ வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌ ஆகிய திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்கள்‌ தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு பிரத்யேகமாக ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌, மாற்றுதிறனாளிகள்‌, சிறுபான்மையினர்‌ மற்றும்‌ மகளிருக்கு கீழ்கண்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில்‌ நடைபெறவுள்ளது.
ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளைஞர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ புகைப்படம்‌, மாற்று
சான்றிதழ்‌, சாதிசான்றிதழ்‌, குடும்ம அட்டை, ஆதார்‌ அட்டை, விலைப்பட்டியல்‌ மற்றும்‌ திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன்‌ வரும்பட்சத்தில்‌ இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பம்‌ பதிவேற்றப்பட்டு கடன்‌ திட்ட விண்ணப்பம்‌ உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌. மேலும்‌ விவரங்களுக்கு 8925533941, 89255 33942 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்‌.

Vignesh

Next Post

PF பணம் எவ்வளவு இருக்கு என்று வீட்டில் இருந்தே பார்க்கலாம்…! இதை மட்டும் செய்தால் போதும்…!

Sat Nov 12 , 2022
ஆன்லைன் மூலம் இபிஎஃப் இருப்பு தொகை சரி பார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.. EPFO ​​அதன் சேவைகளை, அமைப்புகளை பல வழிகளில் செயல்படுத்தவும் மாற்றியமைக்கவும் தொடர்ந்து முயன்று வருகிறது, அந்த வகையில் இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் இபிஎஃப் அல்லது PF பயனாளிகள் யுனிவர்சல் கணக்கு எண் (UNA) இல்லாமல் கூட உங்கள் பிஎஃப் மற்றும் ஈபிஎஃப்ஓ தொகையை சரிபார்க்க முடியும். இதற்காக இபிஎஃப்ஓ ​​சந்தாதாரர் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் நாம் சரிபார்த்துக் […]

You May Like