வியாபார நோக்கத்திற்காக மது கலந்த ஐஸ்கிரீமை விற்பனை செய்தது, அதை குழந்தைகள் வாங்கி அருந்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் பார்லரில், குழந்தைகளுக்கு விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அங்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 100 பைபர்ஸ் விஸ்கி அடங்கிய 11.5 கிலோ ஐஸ்கிரீம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதாவது, ஒரு கிலோ ஐஸ்கிரீமுக்கு 60 மில்லி என்ற அளவில் மதுவை (விஸ்கி) கலந்து அதிக விலைக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கலால் துறையின் கூற்றுப்படி, அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, ஃபேஸ்புக்கில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீமை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய கலால் கண்காணிப்பாளர் பிரதீப் ராவ், மதுபானம் கலந்த பொருட்களை குழந்தைகளுக்கு விற்பனை செய்வதை உறுதிப்படுத்தினார்.
விஸ்கி கலந்த ஐஸ்கிரீம் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் தயாகர் ரெட்டி மற்றும் ஷோபன் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த கடையை கட்டு சரத் சந்திர ரெட்டி என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில், வியாபார நோக்கத்திற்காக மது கலந்த ஐஸ்கிரீமை விற்பனை செய்தது, அதை குழந்தைகள் வாங்கி அருந்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Read More : உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சூப்பர் உணவு இதுதான்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!